Loading...
கனடாவின் நெடுஞ்சாலை 401இல், பாரிய விபத்தை எதிர்கொள்ளவிருந்த பேரூந்தில் இருந்து 47 பயணிகளை காப்பாற்றியுள்ள பெண் பயணி ஒருவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.
சட்பெரியில் இருந்து ரொறொன்ரோ பெரும்பாகத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேரூந்தின் சாரதி மயக்கமடைந்ததையடுத்து எவ்வித பாதிப்பும் இன்றி பேரூந்தை வீதியோரத்திற்கு அப்புறப்படுத்தி பேரூந்தில் இருந்த 47 பயணிகளையும் பத்திரமாக காப்பாற்றியுள்ளார்.
Loading...
இவ்வாறு தைரியமாகவும் விரைவாகவும் செயற்பட்டு அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய குறித்த பெண்ணுக்கு பொலிஸார் உட்பட பயணிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.
60வயது மதிக்கத்தக்க பேரூந்தின் சாரதி நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தற்போது மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருதாகவும் பொலிசார் தெரிவித்தள்ளனர்.
Loading...